• Download mobile app
22 Mar 2026, SundayEdition - 3693
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 !

January 1, 2021 தண்டோரா குழு

2010-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

வரலாற்று பின்னணி கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியிருந்த இப்படம் அப்போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதியில் சோழனின் பயணம் தொடரும் என்பது போல் காட்சி நிறைவடைந்திருக்கும்.இதனால், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் தனுஷ் நடிக்கவுள்ளார்

இதுகுறித்து செல்வராகவன் ட்விட்டர் பதிவில்,

‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்துக்கான போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. படம் 2024-ல் வெளியாகும் என்பதுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் படிக்க