• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவுக்கு ஜோடியாகும் ராகுல் ப்ரீத் சிங்!

July 25, 2017 tamilsamayam.com

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

நடிகை ராகுல் பரீத் சிங் தற்போது ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும்போதே தமிழில் கார்த்தியின் ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்தப் படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை அடுத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் செல்வராகவன். அந்தப் படத்தை முடித்ததும் சூர்யாவின் 36வது படத்தை இவர் இயக்குகிறார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க