• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சந்தானத்தின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு !

March 2, 2019 தண்டோரா குழு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை போல் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் சந்தானம் அடுத்ததாக சர்க்கிள் பாக்ஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிக்கும் ‘எ 1’ திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்தை ஜான்சன் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்க்கான இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்கவுள்ளார். ஏற்கனவே நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘மன்னவன் வந்தானடி’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க