• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக வெற்றிக்கு காரணம் அதிமுகவின் தலைமை சரியில்லாததே – முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி

March 3, 2022 தண்டோரா குழு

அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பு தொடர்பாக கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா தினகரன் இணைப்பு குறித்து பேசியுள்ளனர்.அம்மா எனக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பைக் கொடுத்தார்கள்.இந்த முறை எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நான் ஓய்வாக இருந்துவிட்டேன்.

அதிமுக நூறாண்டு காலம் இருக்க வேண்டும். வளர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கட்சி வளரும். இவர்கள் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் 2 பேரும் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை.
சசிகலா அதிமுகவின் தலைமையேற்க வேண்டும்; டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும்

பிரிந்து இருந்ததால் தற்போது கொங்கு மண்டலமே அதிமுகவிடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் சரியாக வரும். அதிமுக தோல்விக்கு காரணம் அனைவரும் தனித்தனியாக இருந்ததே. சசிகலா இணைப்புக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து என்ன பிரயோஜனம்.திமுக வெற்றிக்கு காரணம் அதிமுகவின் தலைமை சரியில்லை. நான்கு ஆண்டுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க