• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்திற்காக 8 ஆம்புலன்ஸ்கள் – மாவட்ட ஆட்சியர் துவக்க வைப்பு

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்காக 8 ஆம்புலன்ஸ்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் அரசு சார்பில் 7 ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.அதனையடுத்து Bosch என்ற தனியார் நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 1 ஆம்புலன்ஸையும் துவக்கி வைத்தார்.

சாய்பாபா காலனி, பீளமேடு, பாப்பம்பட்டி பிரிவு, மண்ணூர், அரசூர், சுங்கம் மற்றும் அத்திப்பாளையம் ஆகிய 7 இடங்களில் இந்த ஆம்புலன்ஸ்கள் இருக்கும் என தெரிவித்தார். ECRC திட்டத்தின் கீழ் 140க்கும் மேற்பட்ட மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆதரவற்றவர்களை மீட்டு பாராமரிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.

தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸை 6374713767 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கானது. குறிப்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ளவர்களை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் கவனத்து கொள்ளலாம். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் டெலி கவுன்சிலிங் யூனிட் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க