• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவியை பாலியல் பலாத்காரம் பொள்ளாச்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (20) டிரைவர்.கடந்த 2019-ம் ஆண்டு விக்னேஷ், 17 வயது மாணவியை காதலித்து உள்ளார். அந்த மாணவி அப்போது பிளஸ்-1 படித்தார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும், மாணவியை வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, விக்னேஷ் அந்த மாணவியை பழனிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 18.6.2019 அன்று ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிரைவர் விக்னேசை கைது செய்தனர்.மேலும், அவர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன்,மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் விக்னேஷ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க