• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

February 25, 2022 தண்டோரா குழு

கோவை மதுக்கரை அருகே 5 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய வீடியோ வைரல் ஆன நிலையில் மகனை தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (32) இவரது மனைவி ரெஜினா பானு இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி முகமது அசாருதீன் (10) முகமது அர்சத்தீன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதில் மூத்த மகன் ரெஜினா பானுவுடனும், இளைய மகன் சாதிக் பாஷா வுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில் இளையமகன் அர்ஷத்தீனை, சாதிக் பாஷா கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து வீடியோ குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாதிக் பாஷாவை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும், ஆனால் அவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்காமல் இருந்த நிலையில் இளைய மகன் தாய் ரெஜினா பானுவை சந்தித்ததால் ஆத்திரத்தில் தாக்கியதாக கூறி உள்ளார். இதேபோல் அப்பகுதியில் உள்ள அவர்கள் கூறும்போது அடிக்கடி மது போதையில் வந்து மகனை சாதிக் பாஷா கொடூரமாக தாக்கி வருவதாகவும் சிறுவனை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க