• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்றிய அரசு நிறுவனத்தால் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வேலை தேடுவோர் பங்கேற்க அழைப்பு

February 18, 2022 தண்டோரா குழு

ஒன்றிய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தால் சான்றிதழுடன் அளிக்கப்படும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் கோவை பிரிவு பொறுப்பு அதிகாரி டி.பாலகுரு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் மூலம் வேலை தேடுவோர் மற்றும் வேலையில் உள்ளவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும், புதிய தொழில்கள் தொடங்கவும் உதவும் வகையில் பல்வேறு உற்பத்தித் துறை சார்ந்த பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.குறைந்த காலத்தில் இத்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி வரும் 24 முதல் 27-ம் தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த மேலாண்மை மற்றும் செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சிகள் அரசின் விதிமுறைகளின்படி சிறந்த அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றவர்கள் இப்பயிற்சிகள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0422 2993949, 94880 79266 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க