• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கைது

February 18, 2022 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கரூரில் இருந்து வந்திருக்கக்கூடிய திமுகவினரை மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும், துணை இரணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து,அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது
தரையில் படுத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை கைவிட மறுத்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்
போலீசார் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

3 மணி நேரமாக போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார்அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க