• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முக கவசம் வழங்கி பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்

February 14, 2022 தண்டோரா குழு

முக கவசம் வழங்கி ,பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்,இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து வருகிறது.பல்வேறு முன்னனி கட்சியினர் வித விதமாக பிரச்சாரங்கள் செய்து வரும் நிலையில், இதற்கு தானும் சளைத்தவன் அல்ல என நிரூபிக்கும் வகையில் கோவை 71 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் ஆனந்த் சிங் பிரச்சாரத்தில் அசத்தி வருகிறார்.

அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களாலும் டோனி சிங் என அழைக்கப்படும் இவர் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்ற டோனி தனது சின்னமான பெட்ரோமாக்ஸ் விளக்கை கையில் ஏந்தியபடி அவரது ஆதரவாளர்களுடன் ஆர்.எஸ்.புரத்தில் வாக்கு சேகரித்தார்.

அந்த பகுதி மக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி வாக்கு சேகரித்த டோனி சிங், இந்த தேர்தலில் 71 வது வார்டு பகுதி மக்கள் தனக்கு வெற்றி வாகை சூடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க