• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலம்பம் சுற்றிக்கொண்டே 10 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடி சாதனை

February 14, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் கையில் சிலம்பம் சுற்றிக்கொண்டே 10 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்துள்ளனர்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன்,ஜெயந்தி தம்பதியினரின் மகன் ரூபேஷ் ஆறு வயதான சிறுவன் ரூபேஷ் கராத்தே பயிற்சியுடன் சிலம்பமும் கற்று வருகிறார். இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு சாதனையாக சிறுவன் ரூபேஷ்,சரவணன் என்ற மாணவருடன் இணைந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

சின்னவேடம்பட்டியில் துவங்கி கோவில்பாளையம் வரை சென்று மீண்டும் கீரணத்தம் வழியாக மீண்டும் சின்னவேடம்பட்டி வந்து சேர்ந்தனர்.. சாதனை மாணவர்கள் நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.சாதனை மாணவர்களுக்கு தியாகு நாகராஜ் மற்றும் சிரவை சிவா ஆகியோர் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கவுரிவித்தனர்.

மேலும் படிக்க