• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி:மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை

February 12, 2022 தண்டோரா குழு

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் மின்சார ஊழியர்கள் குடும்பத்தார் மற்றும் மலைவாழ் மக்கள் என 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டுயானைகள் இங்கு வருகிறது,இதை தடுக்கும் விதமாக வனத்துறையினர்மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை உலா வந்தது.

குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

கடந்த சில தினங்களாக சின்னார் பதிமலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், கவி அருவி,வால்பாறை சாலை பகுதிகளில் நடமாட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க