• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – ரூ.1.55 லட்சம் பறிமுதல்

February 11, 2022 தண்டோரா குழு

கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

கோவைப்புதூர் பகுதியில் கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, லைசென்ஸ் கொடுப்பது உள்பட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து 16 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் குழு இன்று மாலை கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும் படிக்க