• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலை வசதி,குடிநீர், பாதாள சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்

February 9, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 10 வது வார்டு பகுதியில் தி.மு.க.வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கதிர்வேல் சாலை வசதி,குடிநீர், பாதாள சாக்கடை சீரமைப்பு போன்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், கோவை மாநகராட்சி 10 வது வார்டில் தி.மு.க.வேட்பாளராக கதிர்வேல் போட்டியிடுகிறார்.

கட்சியில் தமக்கு இந்த வாய்ப்பு வழங்கிய கழக தலைவர் முதல்வருக்கும்,கோவை மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும்,மாவட்ட செயலாளர் பையா ஆர் கிருஷ்ணன் ஆகியோருக்கும் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்கும் கதிர்வேல்,
பத்தாவது வார்டு பகுதியில் தாம் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் சாலை வசதி குடிநீர்,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை அமைப்பேன் எனவும்,குறிப்பாக தமிழக முதல்வரின் பல்வேறு நலத்திட்டங்களை வார்டு பகுதி பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க