• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கார் மோதி மாற்றுத்திறனாளி மூதாட்டி பலி

February 9, 2022 தண்டோரா குழு

கோவையில் கார் மோதி மாற்றுத்திறனாளி மூதாட்டி உயிரிழந்தார்.ஓட்டுனரை
பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவை சிவானந்தா காலனி கண்ணப்பன் நகரில் உள்ள பாலத்தின் அடியில் இன்று மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த மூதாட்டி மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து வந்த அந்த மூதாட்டியின் உறவினர்கள் வாகன ஓட்டுனரை முற்றுகையிட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை மீட்டு விபத்தில் பலியான மூதாட்டி உறவினர்களை சமாதானம் செய்தனர்.பின்னர் சடலத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அந்த மூதாட்டி மேல் மோதிய வாகனம் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் கார் என்பதும் காரில் கட்சிப் பிரமுகர் இல்லை என்பதும் தகவலாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க