• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் 71 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங்

February 9, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு முன்னனி கட்சியினருடன் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். அந்த வகையில் 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 71 வது வார்டு பகுதியான ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை உள்ளாட்சி தேர்தல் களத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆனந்த் சிங் என்பவர் களமிறங்கி இருப்பது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவர் தனது பேட்டியில் கூறுகையில்,

பல்வேறு சமுதாய மக்களும் வசித்து வரும் ஆர்.எஸ்.புரம் பகுதி மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதில் தாம் பெருமை படுவதாக கூறிய அவர்,உருவத்தில் தாம் பஞ்சாபியாக இருந்தாலும் தமிழன் என தம்மை பெருமையாக கூறினார். தொடர்ந்து அவர் 71 வது வார்டில் போட்டியிடும் தமக்கு பெட்ரோமாக்ஸ் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தம்மை கோவை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என உறுதியோடு கூறினார்.

மேலும் படிக்க