• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

February 8, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா மற்றும் அரசியல்‌கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள 2312 வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் 2322 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 484 வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 2806 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,
வாக்குச்சாவடிகளுக்கு தேவைப்படும் 2303 கட்டுப்பாட்டுக் கருவிகள், 20 சதவீதம் இருப்பு வைக்கப்பட்டுள்ள 480 கட்டுப்பாட்டு கருவிகள் என மொத்தம் 2783 கட்டுப்பாட்டுக் கருவிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பின்னர் வாக்கு எண்ணும் மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் உடனிருந்தார்.

மேலும் படிக்க