• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலியை பிரித்ததால் வாலிபர் தற்கொலை

February 8, 2022 தண்டோரா குழு

கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(26). பால் வியாபாரி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் சமீபத்தில் கொடைக்கானல் சென்றனர்.

இதற்கிடையே தனது மகளை காணாது அதிர்ச்சியடைந்த பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், காதல் ஜோடிகள் கொடைக்கானலில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு கோவை அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார்.

இதனால் போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக சரவணக்குமார் மிகுந்த மன உளைசலுக்கு ஆளாகினார்.காதலியை மறக்க முடியாமல் தவித்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க