• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

31வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் கணேஷ் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

February 8, 2022 தண்டோரா குழு

கடந்த பத்து ஆண்டு கால அ.தி.மு.க.வின் சாதனைகளை கூறி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவோம் என 31 வது வார்டில் அ.தி.மு.க சார்பாக போட்டியிடும் கணேஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில்,தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில்,கோவை மாநகராட்சி 31 வது வார்டு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் கணேஷ் குமார் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வரும் கணேஷ் குமார் கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருவதாகவும்,குறிப்பாக கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்த வளர்ச்சி பணிகள் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் என உறுதி பட கூறினார்.

மேலும் படிக்க