• Download mobile app
08 Sep 2026, TuesdayEdition - 3863
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஷாலினி (23), நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று மாலை வீட்டில் இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சு வரவழைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, செட்டி வீதி அருகே சென்றபோது, ஷாலினிக்கு வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் அருள்குமார் ஆம்புலன்சை டவுன்ஹால் பகுதியில் நிறுத்தி பைலட் ஜிவின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில், ஷாலினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தாய், சேய் இருவரையும் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க