• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குதிரையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

February 3, 2022 தண்டோரா குழு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. சிலர் வித்தியாசமான முறைகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 32வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ள மகேஷ்வரன் சிவானந்த காலனி பகுதியில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அவர் குதிரையில் வந்தார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டும் விதமாக குதிரையில் வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் குதிரையை போல வேகமாக எனது வார்டு மக்களுக்காக உழைப்பேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க