• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

February 1, 2022 தண்டோரா குழு

கோவையில் சில நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில், கோவை ஆட்சியர் அலுவலக திட்ட அதிகாரி பிஜூ அலெக்ஸ் தலைமையில் நேற்று சலீவன் தெருவில் உள்ள அப்பாஸ் என்பவரது டையிங் நிறுவனத்தில் சோதனை செய்தனர்.அப்போது அங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் 2 பேரை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் குழந்தை தொழிலாளர்கள் 2 பேரை மீட்டனர்.

இது தொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில்,போலீசார் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய டையிங் நிறுவன உரிமையாளர் அப்பாஸ் உதித் ஷேக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரத்தில் உள்ள ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க