• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு வடமாநில வாலிபர் தற்கொலை

February 1, 2022 தண்டோரா குழு

கோவையில் காதல் தோல்வியால் காதலியின் துப்பட்டாவால் தூக்கிட்டு வடமாநில வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சுர்ஜித் கட்டுவா(28). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கோவை வெறைட்டிஹால் ரோட்டில் உள்ள நகைப்பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சொந்த ஊரில் ரத்தினா என்ற இளம்பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தார். மேலும் தினமும் காதலியுடன் செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுர்ஜித் கட்டுவா வாட்ஸ் ஆப்பில் மற்றொரு பெண்ணுடன் அரட்டை அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரத்தினா சுர்ஜித் கட்டுவாவுடன் சண்டையிட்டு அவருடனான காதலை முறித்து கொண்டார். அவரது செல்போன் அழைப்பை ஏற்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் தனது காதலி தன்னுடம் பேசாமல் இருந்ததால் சுர்ஜித் கடும் மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார்.

காதலியை மறக்க முடியாமல் பல முறை அவரை செல்போனில் அழைத்தும் காதலி அவரது அழைப்பை ஏற்கவில்லை. இதன் காரணமாக மன வேதனையடைந்த சுர்ஜித் கட்டுவா தான் தங்கியிருந்த தியாகி குமரன் தெருவில் உள்ள அறையில் தனது காதலியின் நினைவாக அவரிடம் வாங்கி வைத்திருந்த துப்பட்டாவை கதவின் இரும்பு கம்பியில் மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த வெறைட்டிஹால் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் காதலியின் துப்பட்டாவில் வடமாநில ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க