• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து – மூச்சுத் திணறலில் தவிக்கும் மக்கள்

January 31, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று இரவு தீப்பிடித்ததால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது. கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் இங்கு அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது.

குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால், தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது.இதனால், சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தானாகத் தீப்பிடிக்கிறதா?அல்லது இங்குள்ள ஊழியர்கள் குப்பை அளவை குறைக்க வேண்டுமென்றே தீப்பற்ற வைக்கின்றனரா? என்று சந்தேகம் எழுந்தது.மேலும் குப்பைக்கிடங்கு செயல்பட கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில், குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கன மீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்த சுழலில்,இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கடும் புகை மூட்டம் எழுந்ததால், சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, துணை தீயணைப்பு அலுவலர் அழகர் சாமி தலைமையில் ஆகியோர் தலைமையில் பீளமேடு, கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையங்களிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும், 25 தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்றனர். ஆனால், குறித்த நேரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யாத காரணத்தால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,

‘‘வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே, இங்கு நிரந்தரமாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்றோம். தொடர் வலியுறுத்தலுக்கு பிறகு கண்துடைப்புக்கு 3 மாதம் மட்டுமே இங்கு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், முறையான தகவல் கொடுப்பதில்லை’’ என்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிவரை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மேலும் படிக்க