• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருட்டு

January 29, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த காளம்பாளையம் பகுதியில் முத்துராஜா என்பவருக்கு சொந்தமான இணையதள சேவை மையம், ஜெராக்ஸ், மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி கடையில் பணியாற்றும் பெண் ஊழியர் வழக்கம்போல கடையை திறந்து சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கடையில் பொருட்களை வாங்குவது போல யதார்த்தமாக கடைக்குள் சென்றுள்ளார்.

இதனையடுத்து யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்து கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன் ஒன்றை திருடிவிட்டு யாரிடமும் சொல்லாமல் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிச் சென்ற அந்த காட்சிகள் தற்போது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க