• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் மனைவியை குத்திகொலை செய்த கணவன்

January 21, 2022 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த இராமநாதன் வேலைக்கு செல்லாமல் இருந்துவந்ததாக தெரிகிறது.இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்குள் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இராமநாதனுடன் இதுகுறித்து கேள்வி எழுப்பி மனைவி அனுராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இராமநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி அனுராதாவை வயிறு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார்.வலிதாங்க முடியாமல் துடித்த அனுராதா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலிசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இராமநாதனை கைது செய்த போலிசார் நீதிமற்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கணவனின் வெறிச்செலலால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க