• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் தாக்குதல்

January 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் மீது ஒப்பந்த பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக, பீளமேடு காவல் நிலையத்தில், பாதிக்கபட்ட தூய்மை பணியாளர் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர் சிவகுமார் என்பவரை அவருடன் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சிவகுமார் அளித்துள்ள புகார் மனுவில்,

‘‘எனக்கு இரண்டு நாட்களாக உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் சூப்பர்வைசரிடம் முன்னதாகவே சொல்லி விட்டு விடுப்பு எடுத்தேன். ஆனால் ஒப்பந்த தூய்மை பணியாளர் ஒருவர் என்னை வேண்டுமென்றே கன்னத்தில் அடித்தது மட்டுமின்றி, தகாத வார்தைகளால் திட்டினார். இது குறித்து சக பணியாளர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க