• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் கார் கேர் அவுட்லெட்: ‘தி டீடெய்லிங் மாஃபியா’ துவக்கம்

January 17, 2022 தண்டோரா குழு

கோவை லக்ஷ்மி மில்ஸ் பகுதியில், அனைத்து வகையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்களை பழுது பார்க்கும் ‘தீ டீட்டைலிங் மாபியா’ என்ற நிறுவனத்தை முண்ணனி கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கோவை லக்ஷ்மி மில்ஸ் பகுதியில், தி டீட்டைலிங் மாபியா என்ற பெயரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான அனைத்து பழுது நீக்குதல் நிறுவனத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிறுவனத்தை, உலக கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிறுவனத்தின், உரிமையாளரான சிவா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,

கோவையில் முதன்முறையாக இந்த நிறுவனம் துவங்கபட்டுள்ளது. உலக நாடுகளின் வரிசையில் இது வரை இது போன்று 85 நிறுவனங்கள் உள்ளது என்றாலும், கோவையில் முதன்முறையாக துவங்கபட்டுள்ளது.மேலும், இருசக்கர வாகனங்கள் முதல், மாருதி 800, டாட்டா இன்டிகா, மாருதி ஷிப்ட், ஆடி, பெராரி, பென்ஸ், மினிகூப்பர் பொன்ற பல்வேறு வாகனங்களுக்கு தேவையான வாஷிங், பெயின்டிங், டென்ட் மற்றும் டிங்கரிங், போன்ற பழுதுகளை நிறுவனத்தின் உள்ளது.

போலவே மிக துல்லியமாக, வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு இயந்திரங்களின் மூலமாகவும், உலக தரமிக்க பெயின்ட் வகைகளை கொண்டு செய்து தருகிறோம். மிக குறைந்த செலவில் தரமிக்க பணிகளை இங்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

மேலும் படிக்க