• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி பலாத்காரம் -டிரைவர் கைது

January 17, 2022 தண்டோரா குழு

கோவையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுதாகரன் (21). சோமையம்பாளையம் பஞ்சாயத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.இவர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அவ்வப்போது பொருட்களை ஏற்றி வருவார்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதனிடையே அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய சுதாகரன் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், சுதாகரன் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க