• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 25 கடைகள் உள் வாடகை கடை நடத்துபவர்கள் அவர்களது பெயரில் உரிமத்தை மாற்றிக் கொள்ளலாம்

January 11, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குறிப்பிட்ட கடைகள் ஏலம் எடுத்த உரிமைதாரர்களால் நடத்தப்படாமல் உள்வாடகைக்கு மாற்று நபர்களால் நடத்தப்பட்டு வருவது கள ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உள்வாடகைக்கு கடை நடத்துபவர்கள் அவர்களது பெயரில் கடை வாடகையினை செலுத்த இயலாது. மேலும் கடை தொடர்பாக மாநகராட்சியில் எவ்வித உரிமையும் கோர இயலாது.

இதுபோன்று மாநகராட்சி கடைகளை உள் வாடகைக்கு எடுத்து நடத்தும் நபர்களுக்கு அவர்களது பெயரில் கடை உரிமத்தை மாற்றிக் கொள்ள ஓர் வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் அவர்கள் பயன் அடைவார்கள்.இவ்வாறு எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் பழைய கடைகளில் 19 நபர்களும், புதிய கடைகளில் 6 நபர்களும் ஆகமொத்தம் 25 நபர்கள் உள் வாடகை அடிப்படையில் கடைகளை நடத்தி வந்தனர்.

எனவே குத்தகை உரிமையை வாடகைக்கு எடுத்து நடத்தும் நபர்கள் பெயரில் மாற்றத்தரலாம். இதற்காக விண்ணப்பதாரர் 12 மாதங்களுக்குரிய மாதாந்திர குத்தகை தொகைக்கு சமமான தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். இது தவிர 12 மாத வாடகைக்கு சமமான தொகையை பெயர் மாற்றக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் மேற்காண் 25 நபர்கள் கடை உரிமை பெயர் மாற்றத்திற்கான மனுக்களை சமர்ப்பித்தனர்.

மனுக்களை பரிசீலித்த பின்னர் மேற்காண் 25 நபர்களிடமிருந்து வாடகை முன்பணம் மற்றும் பெயர் மாற்றக் கட்டணமாக ரூ.57 லட்சத்து 38 ஆயிரத்து 264 வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள் வாடகைதாரர்களுக்கு அரசு அளிக்கும் சலுகையினை பயன்படுத்தி அவர்களது பெயரில் கடை உரிமத்தினை மாற்றி தங்களுக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க