• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து – தாய் தற்கொலை

January 6, 2022 தண்டோரா குழு

கோவையில் சோசியம் பார்த்த தாய் “தனக்கு கைகால்கள்கள் வராது”எனக்கூறியதால் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த அப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மனைவி தனலட்சமி(58). இவருக்கு சசிக்குமார் என்ற மகனும் மனநலம் பாதிக்கபட்ட சுகன்யா(30) என்ற மகளும் உள்ளனர்.திருமணமான சசிகுமார் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்தார்.

வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வசித்து வந்த தனலட்சுமி,குடும்பபிரச்சனைகள் காரணமாக சோசியம் பார்துள்ளார்.சோசியர் வரும் காலங்களில், தனலட்சுமிக்கு கைகால்கள் வராது எனக்கூற மனமுடைந்து தனலட்சுமி நேற்று இரவு தனது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.தனலட்சுமி தனது மகனிடம் ” நாங்கள் இருப்பது உனக்கும் பிரச்சனையாக உள்ளது” தங்கையை கவனிக்க முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைகேட்ட சசிக்குமார் அவ்வாறு ஒன்றும் நடக்காது என ஆறுதல் கூறியதாக தெரிகிறது.இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த சசிக்குமார் தனது நண்பரை தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்குமாறு கூறியுள்ளார். அவரது நண்பர் வீட்டில் சென்று பார்க்கும் போது தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சுகன்யா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து துடியலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

மேலும் படிக்க