• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரள எல்லையில் 26 இடங்களில் சோதனை சாவடிகள்

January 5, 2022 தண்டோரா குழு

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரள எல்லையில் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க