• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாமிற்கு எதிர்ப்பு – த.பெ.தி.கவினர் கைது

December 30, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சியை தடுத்து நிறுத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் சாகா பயிற்சியை நடத்திவருகின்றனர். இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கல்வி நிலையங்களில் இதுபோன்ற பயிற்சியை நடத்தக்கூடாது மதவெறி கூடாரங்களாக மாறக்கூடும் என்று கூறி இது சம்பந்தமாக காவல்துறையினரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்து சாகா பயிற்சியை கல்வி நிலையங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சாகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் படிக்க