• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

December 28, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள தலைமை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அகில இந்திய பட்டதாரி தொழிலாளர் பொறியாளர் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் சார்பில் ஊழியர்கள் இன்று தொடர் 3 நாட்கள் உண்ணாவிரதம்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தகுதியுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,மறுசீரமைப்பு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும். 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தளர்வு அளித்து அனைத்து பதவிகளுக்கும் பதவி உயர்வு அளிக்க வேண்டும். சி.எ. ஓ பதவி உயர்வுக்கான தகுதி சேவையில் தளர்வு அளிக்க வேண்டும். கற்காலளிக பதவி உயர்வுகளை தவிர்த்து நிரந்தர பதவி உயர்வுகளை வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க