• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் முழுவதும் யோகா போட்டியை அரசு ஏற்று நடத்த வேண்டும் – யோகா மாணவிகள் கோரிக்கை

December 27, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் யோகா கலைகளை எளிய மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு யோகா போன்ற கலைகளை எடுத்து நடத்த வேண்டும் என யோகா மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் ஐந்து வகையான யோக நிலைகளை மாணவ மாணவியர்கள் செய்தி காட்டி அதில் அந்த யோக நிலைகளை சிறப்பாக செய்யும் மாணவர்கள் அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து யோகா மாணவி வைஷ்ணவி பேசும்போது,

யோக கலைகளை அனைவரும் கற்றுக் கொள்ளும் பொருட்டு இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன வரும் காலங்களில் மாநில அளவில் இம்மாதிரியான போட்டிகள் அரசு ஏற்று நடத்தும் போது யோக கலைகளும் பாரம்பரியக் கலைகளும் அனைவருக்கும் சென்றடையும் இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று அதனை செய்து காட்டி பரிசு பெற்று செல்வதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க