• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் – மனைவி,கள்ளக்காதலன் கைது

December 26, 2021 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியில் வசித்தவர் ராஜா ( வயது 36).இவருக்கு ரீனா (வயது 36) என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மனைவி ரீனா துடியலூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து இவ்வழக்கை துடியலூர் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனையடுத்து தனது சகோதரர் ராஜா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சகோதரி மாலா (வயது 42) துடியலூர் போலீசில் புகாரளித்தார்.இந்நிலையில் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இவ்வழக்கை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இறந்த ராஜாவின் மனைவி ரீனா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க