• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சிப் பகுதிகளில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் – நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு

December 24, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள், 87 ஆவது வார்டு முதல் 100ஆவது வார்டுகள் வரை தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா அன்மையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். அப்போது, தற்சமயம் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அற்புதம் நகர், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2,500
குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கிட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு ஒப்பந்த காலத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, ரூ.168 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர், பயோமைனிங் முறையில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணிகளை திட்ட காலத்துக்குள் முடிக்க உத்தரவிட்டார். மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து, மக்கா குப்பைகள் தேவைப்படும் சிமென்ட் நிறுவனங்கள் மற்றும் இதர பயன்பாட்டுக்கு துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா , கோவை மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், குடிநீர், பாதாளச்சாக்கடைத் திட்டப் பணிகள் தார்சாலை, தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்தும், அவற்றை விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க