• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கானாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த இளைஞர் கைது !

December 24, 2021 தண்டோரா குழு

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது30). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார்.அப்போது அந்த பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.இதனை நம்பி பெண்கள் அவர்களது போட்டோவை அவருக்கு அனுப்பினர். இதை பார்த்த அவர் அவர்களது அழகை வர்ணித்து ஆபாசமாக பேசுவார்.

அவரது ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அஜய்க்கு அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அவரது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீழ்ந்தனர். அவர்கள் அஜயால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் அஜயிடம் சிக்கிய பெண்கள் அவமானத்திற்கு பயந்து போலீசில் புகார் தராததால் மேலும் மேலும் பல பெண்களிடம் அத்துமீறி உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் அஜய் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க