• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்

December 22, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.ச.சமீரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோருடன், ஆணையத்தின் செயலர் சுந்தரவல்லி, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கோவையில் காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய 4 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 18 வார்டுகள் 24 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட திருமுருகன்பூண்டி நகராட்சி, சேலத்தில் தாரமங்கலம், இடங்கனசாலை ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு எண்ணிக்கை 15லிருந்து 27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வார்டு மறுவரையின் போது ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக ஆணையத்திடன் மனு அளித்தனர்.

மேலும் படிக்க