• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறுந்தொழில் முனைவோருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் ஆர்ப்பாட்டம்

December 20, 2021 தண்டோரா குழு

நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சுமார் 100 சதவீதம் அளவிற்கு விலை உயர்வு இருப்பதாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இந்த மூலப் பொருட்கள் விலையேற்றமும் இருப்பதாக தொடர்ந்து தொழில் துறையினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் இன்று ஒரு நாள் முழு கதவடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக குறுந்தொழில் முனைவோருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை சிவானந்தா காலனியில் மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மூலப்பொருட்கள் பேரவை மத்திய அரசு கட்டிக்கொடுத்த கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் குறுந்தொழில் இருவருக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதால் குறுந்தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு வருடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் 10.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை ரத்து செய்யப்பட்டுள்ளது கடந்த நான்கு வருடங்களில் அதானி கம்பெனிகளின் சொத்து மதிப்பு 756 சதவீதம் அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 250 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனால் சிறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது இத்தகைய சூழலில்தான் இந்த மூலப்பொருள் விலை உயர்வும் உள்ளது. இதன் காரணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளது சிறு குறு தொழில்கள் மூடப்பட்டால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி அவர் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க