• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் – இருவர் மீது வழக்குப்பதிவு

December 19, 2021 தண்டோரா குழு

கோவையில் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்துகள் இரவு நேரங்களில் பயணம் முடிந்து அந்தந்த எல்லைக்குட்பட்ட டிப்போக்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று இரவு சிங்காநல்லூரில் இருந்து ஒண்டிபுதூர் டிப்போவிற்கு இரண்டாம் நம்பர் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மதுபோதையில் பேருந்தில் ஏறிய மூன்று பேர் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் பேருந்தை சூலூருக்கு இயக்கும்படி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர் பேருந்து வேறு எங்கும் செல்லாது, டிப்போவுக்கு செல்கிறது என தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவர் நடத்துனர் கவியரசன் மீது தாங்கள் வைத்திருந்த கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் பேருந்திலிருந்து தப்பித்துச் சென்றனர்.

பின்னர் நடத்துனர் கவியரசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் குற்றவாளியை விரைந்து பிடிக்கும்படி சிங்காநல்லூரில் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சிங்காநல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்தனர்.

இதையடுத்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில் இரண்டு பேரிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க