• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் – 2 லட்சம் டோஸ் செலுத்த இலக்கு

December 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 15-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. இதில் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, கோவையில் 18 வயத்திற்கு மேற்பட்ட 93.6 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 68 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

கிராமப்புறங்களில் 601 மையங்கள், மாநகராட்சியில் 249 மையங்கள் என மொத்தம் 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவுவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி கொள்வது மிக அவசியம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க