• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதிய ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் கோவையில் ஆர்ப்பாட்டம்

December 16, 2021 தண்டோரா குழு

சாதிய ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படும் போது விரைவாக விசாரித்து தண்டனை வழங்க வேண்டும், கோவையில் போதைப் பொருள்கள் புழக்கக்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச்செயலாளர் சிவஞானம், மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க