• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்டியலின மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க கோரி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி மனு

December 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டியலின மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு தர வேண்டுமென சமூக சமத்துவ படையின் தலைவரும் முன்னாள் ஐஏஎஸ் மான சிவகாமியும் சமூக நீதிகட்சியின் தலைவருமான பன்னீர்செல்வமும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

இது குறுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகாமி,

கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தையும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் அவர்களுக்கே வழங்க வேண்டும், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வரும் நிலையில் அவர்களின் இல்ல சூழ்நிலைகளை புரிந்து கொண்டு 7 மணிக்கு வேலைக்கு வர ஆவணம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைய மாவட்ட ஆட்சியரிடம் முக்கியமாக வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கிணத்துக்கடவு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதனை மீட்டு தரவேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விசயத்தில் ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பொது விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் பஞ்சமி நில விவகாரத்தில் அரசுக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று தெரிவித்த அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதில் கவனம் எடுத்துக் கொள்வதில்லை என கூறினார்.

அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்திற்கு அந்த மக்களிடம் உரிய பணம் தருவதாக சிலர் கூறுவது பஞ்சமி நில விதிகளையே அழிப்பது போல் உள்ளதென விமர்சித்தார். இந்த அரசு பஞ்சமி நிலத்தை மீட்டு தருகிறோம் என்று கூறி உள்ளது எனவும் அதற்கான நடவடிக்கைகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க