• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் தரிசனம் செய்வதையொட்டி கோவையில் பாஜகவினர் சிறப்பு பூஜை

December 13, 2021 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி இன்று காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனையொட்டி கோவை மாவட்ட பாஜகவினர் பேரூர் தமிழ் கல்லூரியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

பேரூர் தமிழ் கல்லூரியில் உள்ள கலையரங்கத்தில் பிரதமர் காசியில் சாமி தரிசனம் செய்தது திரையிடப்பட்டது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார், உட்பட 20க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டுகளித்தனர்.

பின்னர் மருதாசல அடிகளார் பூஜை செய்த திருநீறை அனைவருக்கும் வழங்கினார். அவரிடம் ஆசி பெற்று பாஜக வினர் சிறிதுநேரம் கலந்துரையாடினர்.

மேலும் படிக்க