• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டிச.18ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

December 8, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி காலை 9 மணிக்கு கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெறவுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில்,

‘‘இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை ஆட் மொபைல்ஸ், விற்பனைத்துறை. மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது பயோ டேட்டா மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94990 55938 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க