• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பூனையை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு !

December 7, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர பகுதியில் பூனை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் கஷ்டம் வந்தாலும் பிராணிகளுடன் நேரம் செலவிட்டால் மனது மிகவும் சந்தோசமாக இருக்கும்.

கண் திருஷ்டி மட்டுமின்றி செய்வினைகள், சூனியம், பேய் பிசாசுகள் போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் பெற்றது இந்த பிராணிகள் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது.

அந்த வகையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் தனது வீட்டில் வளர்த்த செல்லப்பிராணி பூனை காணவில்லை என்பதால் கவலையடைந்த நபர் இதுகுறித்த போஸ்டரை ஒட்டியுள்ளார்.

மேலும் படிக்க