• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

December 4, 2021 தண்டோரா குழு

கோவையில் காந்திபுரம் டவுன்ஹால் பெரிய கடை வீதி ரயில் நிலையம் லட்சுமி மில் சின்னியம்பாளையம் பீளமேடு இடையர்பாளையம் வடபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்று வருகிறது. அலுவலகம் சென்று வீட்டுக்கு திரும்பியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர்கள் பல்வேறு பகுதிகளில் நின்று போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது.அதேபோல ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் கடைகளையும் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதிகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கிராஸ்கட் சாலையில் 700 கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க