2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது.
இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு அணி
விராட் கோலி – 15 கோடி, மேக்ஸ்வெல் – 11 கோடி, சிராஜ் – 7 கோடி
மும்பை அணி
ரோஹித் ஷர்மா – 16 கோடி, பும்ரா – 12 கோடி, சூர்யகுமார் யாதவ் – 8 கோடி, பொல்லார்ட் – 6 கோடி
பஞ்சாப் அணி
மயாங்க் அகர்வால் – 14 கோடி, ஹர்ஷதீப் சிங் – 4 கோடி
ஐதராபாத் அணி
கேன் வில்லியம்சன் – 14 கோடி, அப்துல் சமாத் – 4 கோடி, உம்ரான் மாலிக் – 4 கோடி
சென்னை அணி
ஜடேஜா – 16 கோடி, தோனி – 12 கோடி, மொயின் அலி – 8 கோடி, ருதுராஜ் – 6 கோடி
டெல்லி அணி
ரிஷப் பண்ட் -16 கோடி, அக்சர் பட்டேல் – 9 கோடி, ப்ரித்வி ஷா- 7.50 கோடி, நோர்க்கியா – 6.50 கோடி
கொல்கத்தா அணி
ரஸல் 12 கோடி, வருண் சக்ரவர்த்தி – 8 கோடி, வெங்கடேஷ் ஐயர் – 8 கோடி, சுனில் நரேன் – 6 கோடி
ராஜஸ்தான் அணி
சஞ்சு சாம்சன் – 14 கோடி, ஜோஸ் பட்லர் – 10 கோடி, யஷஷ்வி ஜேஸ்வால் – 4 கோடி
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்