• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏடிஎம் இயந்திரத்தை திறந்து கொள்ளையடிக்க முயற்சி – வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது

November 30, 2021 தண்டோரா குழு

கோவை அருகே கள்ளச்சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அங்கு வந்த மர்மநபர்கள் கள்ளச்சாவி மூலம் ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முயன்றுள்ளனர். உடனே இது குறித்து தகவல் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது.

உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரம் இருக்கும் செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஏடிஎம் இயந்திரத்தில் ஒரு வாலிபர் சாவகாசமாக கள்ளச்சாவி போட்டு லாக்கரை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

வெளியே காவலுக்கு ஒரு வாலிபர் நின்றிருந்தார். போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், இருவரும் தொழிலாளிகள் என்பதும், பிரபல கூரியர் நிறுவனத்திற்கு சரக்குகளை இறக்கிவிட்டு திரும்ப செல்லும் போது கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

அவர்கள் கள்ளச்சாவி தயாரித்து அதன் மூலம் ஏடிஎம் லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகில்(18), காலீத்(28) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அவர்கள் ஏற்கனவே வேறு எங்காவது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க